தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தை வளாக பகுதியில் நல்லம்பள்ளி பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் அரசு டவுன் பஸ்கள் மற்றும் தனியார் நகர பஸ்கள் நாள்தோறும் வந்து செல்கிறது. இந்த பஸ் நிலையத்திற்கு பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. இதனால் பெண்கள், முதியோர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரமேஷ், நல்லம்பள்ளி, தர்மபுரி.