நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் கிராம பகுதிகளுக்கு மினி பஸ் சேவை இயக்கப்பட்டு வந்தது. இது பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது. தற்போது அனைத்து மினி பஸ்களும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மினி பஸ் சேவை இல்லாததால் நெடுந்தூரம் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அனைத்து கிராமங்களுக்கும் ஏற்கனவே இயக்கப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா- வெண்ணந்தூர்