ஆபத்தான பயணம்

Update: 2022-07-19 17:17 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, பென்னாகரம், அமானி மல்லாபுரம் பகுதிகளுக்கு காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட பஸ்சில் மட்டுமே செல்ல முடியும். போதிய டவுன் பஸ்கள் இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு பஸ்சில் ஏறி செல்கின்றனர். மேலும் பஸ்சில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே தமிழக அரசு காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

-தர்மா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்