செயல்படாத சிக்னல் விளக்குகள்

Update: 2022-11-27 13:09 GMT

தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய சாலைகள் சந்திக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் செயல்படுவதில்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. மேலும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வாகன ஓட்டிகளின் நலன் கருதி செயல்படாத சிக்னல் விளக்குகளை சரிசெய்ய முன்வரவேண்டும்.

-இளவரசன், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி