நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் ராசிபுரம் செல்லும் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் வெண்ணந்தூரில் அண்ணா சிலையில் இருந்து காமராஜர் சிலை வரை அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வடிவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.