தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் உள்ள சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் வாகனங்களை தனியார் பஸ்கள் முந்தி செல்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் இந்த பகுதியில் செல்லும் போது கடும் சிரமப்படுகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது போக்குவரத்து துறை போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேல், தர்மபுரி.