வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-05 17:10 GMT

சேலம், நெய்க்காரபட்டி, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அதில் வரும் புகையின் காரணமாக முன் செல்லும் வாகனங்கள் தெரிவதில்லை. மேலும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை எரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-மு.ரமேஷ், சேலம்.

மேலும் செய்திகள்