நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது, இங்கு பெட்ரோல் பங்க் அருகே ஆலை வளாகத்தில் வளர்ந்த சீமை கருவேலமுள் வளர்ந்து நீண்டு கிடக்கிறது. இதனால் தார் சாலையில் செல்லும், பயணிகள், அரசு, மற்றும் தனியார் பஸ்கள், தனியார் பள்ளி- கல்லூரி வாகனங்கள் செல்லும் பொழுது பஸ்சில் முட்செடிகள் மோதுகின்றன, எனவே இந்த முட்செடியை சம்பந்தப்பட்ட துறையினர் அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு சிரமமின்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, மோகனூர், நாமக்கல்.