மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-08-23 17:17 GMT

நாமக்கல் மாவட்டம் அ.மேட்டுப்பட்டி கிராமத்திற்கு காலையில் 2 பஸ்களும், மாலையில் 3 பஸ்களும், இரவில் 3 பஸ்களும் வந்து கொண்டு இருந்தன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த பஸ்கள் சரியாக வருவதில்லை. இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வசந்தி, நாமக்கல்.

மேலும் செய்திகள்