பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

Update: 2022-08-22 17:28 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியில் சில அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்கு செல்லாமல் 4 ரோடு பகுதியில் இருந்து அப்படியே திரும்பி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் வெளியூர் பயணிகள், முதியவர்கள், பொதுமக்கள், பஸ்சுக்காக வெகுநேரம் காத்து நிற்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்