வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு அருகே சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடி உள்ளது. இந்த மூடி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அடிக்கடி அந்தப் பகுதியில் ஆம்புலன்சுகள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் பாதாள சாக்கடை மூடியைச் சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.