சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2026-02-15 12:03 GMT

சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சாக்கடை கால்வாய் தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்