உடைந்த பாதாள சாக்கடை மூடி

Update: 2026-07-12 18:06 GMT
விழுப்புரம் வண்டிமேடு அருகே ராஜாமணி நகரில் இருந்து ஜெயலட்சுமி நகருக்கு செல்லும் சாலையில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் அதில் இருந்து கழிவுநீரானது வெளியேறி சாலையில் வழிந்தோடி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பாதாள சாக்கடை மூடியை விரைந்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்