உடுமலை பழனியம்மாள் லே-அவுட் நுழைவுப் பகுதியில் பாதாள சாக்கடை தொட்டியின் மூடி சேதமடைந்து உள்ளது. அந்த மூடி இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் தொட்டியை கடக்கும்போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள். சேதம் அடைந்துள்ள பாதாள சாக்கடை தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.