பேரூர் தாலுகா வேடப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் புதிய கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது பழைய கழிவுநீர் கால்வாய் ஆங்காங்கே உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதில் கழிவுநீரும் வழிந்தோடுவது இல்லை. இதனால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.