நெல்லை அருகே கோடகநல்லூர் பஞ்சாயத்து கீழக்கல்லூர் கிராமத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வயல்வெளிகளில் தேங்குகிறது. இதனால் பயிர்கள் சேதமடைகின்றன. விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் நீர்பாசன ஓடையிலும் கழிவுநீர் கலப்பதால், அதனை பருகும் கால்நடைகள் மடிகின்றன. எனவே கழிவுநீரை முறையாக சுத்திகரித்து மாற்று இடத்தில் வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.