தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-07-05 09:42 GMT

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பொள்ளாச்சி சாலையில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கும் அவலம் நீடிக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதேபோல், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீேழ விழுந்து விடுகிறார்கள். மேலும் துா்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் மூக்கைப் பொத்தியப்படி செல்லும் அவல நிலை நீடிக்கிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைத்து கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

கண்ணன், தாராபுரம்.

மேலும் செய்திகள்