ஓசூரில், கிருஷ்ணகிரி சர்வீஸ் சாலையில் எல்.ஐ.சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான 2், 4 சக்கர வாகனங்கள் செல்கின்றன. மக்கள் நடமாட்டமும் அதிகளவில் காணப்படும். இந்த நிலையில், எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் நீண்ட காலமாக மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. யாரேனும் அவசரமாக இருசக்கர வாகனத்திலோ, நடந்து சென்றாலோ இந்த கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து உடனடியாக கழிவுநீர் கால்வாயின் மேற்புறம் சிமெண்டு சிலாப்பு அமைத்து அதனை மூட ஏற்பாடு செய்ய வேண்டும்.