கழிவுநீர் கால்வாய் தொட்டியால் ஆபத்து

Update: 2026-06-28 09:14 GMT

காங்கயம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். டவுன் பஸ் நிலையத்தின் பக்கவாட்டில் கைவிடப்பட்ட கழிவறை அருகே கழிவுநீர் செல்ல நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் தொட்டி மூடி திறந்து கிடக்கிறது. பல நாட்களாக திறந்து கிடக்கும் இந்த தொட்டி இரவு நேரங்களில் பார்வைக்கு தெரிவதில்லை. கவனக்குறைவாக நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், திறந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், மண் மற்றும் குப்பைகள் தொட்டியை நிரப்பி வருகின்றன. எனவே, திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய் தொட்டியாக உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரன், காங்கயம்.

மேலும் செய்திகள்