பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் உள்ள குட்டையில் கழிவுநீர் அதிகரித்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நோய் ஏற்பட்டு பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசும் குட்டை தண்ணீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.