நீர்வரத்து கால்வாயை தூர்வாரி சீரமைப்பார்களா?

Update: 2026-09-20 18:56 GMT

கண்ணமங்கலம் ஏரிக்கு நீர் வரத்துக் கால்வாய் மேல்வல்லம் நாகநதியில் தொடங்கி சுமார் 5 கி.மீ. தூரம் ஓடி ஏரியில் சேருகிறது. வழியில் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் சிறுபாலம் பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் ஏரியில் கலக்காமல் உள்ளது. மழைக் காலம் தொடங்கும் முன் கண்ணமங்கலம் ஏரி நீர்வரத்துக் கால்வாயை போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் தூர்வாரி சீரமைப்பார்களா?

-ரமேஷ்கண்ணன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்