கோவை மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் நேதாஜிபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. அத்துடன் அருகில் குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.