சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2026-09-20 13:52 GMT

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் மின்வாரிய காலனி 3-வது குறுக்கு தெருவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணிக்காக மேலே இருந்த கற்கள் அகற்றப்பட்டன. இந்த பணி முடிந்து 40 நாட்கள் கடந்த பின்னரும் தூர்வாரப்பட்ட மண் கழிவுகள் அகற்றப்படாமலும், சாக்கடை கால்வாய் மூடப்படாமலும் உள்ளது. இதனால் அந்த தெருவில் இருசக்கர வாகனங்கள், கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக மண்ணை அகற்றவும், சாக்கடை கால்வாயை மூடவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்