கால்வாயில் அடைப்பு

Update: 2026-09-20 13:57 GMT

குன்னூரில் உள்ள கரோலினா பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்குள்ள நடைபாதையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அத்துடன் தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்குள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்