கால்வாயை தூர்வாருவார்களா?

Update: 2026-09-13 20:27 GMT

வேலூர் பழைய மாநகராட்சி அலுவலம் எதிரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் செல்லும் வழியில் தமிழ்நாடு ஊர்க்காவல் படை அலுவலகம் உள்ளது. இங்கு ஒருசில நேரத்தில் அலுவலக வாசல் முன்பு கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அலுவலகத்தின் உள்ளே செல்ல, கழிவுநீர் மீது கற்களை போட்டு, அதன் மீது நடந்து செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையம், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடமாக இருப்பதால் அடிக்கடி கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செந்தில், வேலூர்.

மேலும் செய்திகள்