கழிவு மண்ணை அகற்றுவார்களா?

Update: 2026-09-13 20:12 GMT

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் இருந்து ஓல்டு டவுன் செல்லும் வழியில் உத்திரிய மாதா கோவில் தெரு உள்ளது. இங்கு கால்வாயில் இருந்து தூர்வாரப்பட்ட கழிவு மண் அகற்றப்படாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதுபோல் அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக கழிவு மண்ணை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாபு அருள், போப் தெரு, வேலூர்.

மேலும் செய்திகள்