நாமகிரிப்பேட்டையில் இந்திரா நகர் பகுதி உள்ளது. ஆத்தூர் பகுதியிலிருந்து நாமகிரிப்பேட்டை வழியாக பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்திரா காலனி பகுதியிலிருந்து வெளிவரும் சாக்கடை கழிவுநீரானது மெயின் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உடனடியாக சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.