கடமலைக்குண்டுவில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. அதோடு பயங்கர துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.