திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் எதிரே ராக்கின்ஸ் ரோட்டில் இருந்து பாரதியார் சாலை திரும்பும் இடத்தில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தேங்கியிருந்த கழிவுநீரால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.