பந்தலூர் அருேக குழிக்கடவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அய்யன்கொல்லி பஜார் தொடக்கத்தில் செல்லும் கால்வாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.