கொடைக்கானல் தாலுகா பாச்சலூர் கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி கால்வாயிலேயே தேங்குவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.