விழுப்புரம் ரெயில் நிலைய முகப்பு வாயில் அருகில் பயணிகள் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கழிவுநீர் வழிந்தோடி துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடுக்கு வழிவகுத்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ரெயில் நிலையத்தின் வெளியே சுத்தம் செய்யும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தான் அதை சுத்தம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் சுத்தம் செய்ய முன்வராமல் உள்ளது. இவ்வாறு காரணத்தை கூறாமல், மக்களின் சுகாதாரம் சார்ந்த பிரச்சினையில் துரிதமாக செயல்பட வேண்டும் என்று ரெயில் பயணிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.