சேலம் அம்மாபேட்டை பாரதி தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளின் நடுவே சாலையில் செல்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதையும் கொஞ்சம் கவனித்து சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.