கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2026-08-30 19:04 GMT

பள்ளிகொண்டா பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 11-வது வார்டு போலீஸ் நிலையம் பின்பக்கமுள்ள கட்டுப்புடி சாலையில் கடந்த ஆண்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. சுமார் 100 மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் செல்லும் கழிவுநீர் கலக்க இணைப்பு கால்வாய் இல்லாததால் மாதக்கணக்கில் ஓரிடத்திலேயே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், பள்ளிகொண்டா. 

மேலும் செய்திகள்