சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2026-08-30 14:22 GMT

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் எதிரே ராக்கின்ஸ் ரோட்டில் இருந்து பாரதியார் சாலை திரும்பும் இடத்தில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த பல மாதங்களாக கழிவுநீர் சாலையோரம் பெருக்கெடுத்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு செல்கிறது. பள்ளமான சில இடங்களில் அவை குளம்போல் தேங்கி நிற்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் பஸ்சுக்காக அந்த இடத்தில் காத்திருக்கும் போது துர்நாற்றம் தாங்காமல் மூக்கை பொத்திக்கொண்டு இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்