மோகனூர் கருப்பணார் கோவில் முன்புறம் லத்துவாடி பிரிவு சாலை உள்ளது. இந்த சாலையில் கழிவுநீர் செல்லும் சாக்கடை கால்வாய் மேல்தள மூடி உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாக்கடை கால்வாயில் தவறி விழும் ஆபத்தான நிலை உள்ளது. எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் சாக்கடை கால்வாய் மேல்தள மூடியை மாற்ற வேண்டும்.