திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டுர் ஊராட்சியில் பெரிய களக்காட்டுர் கிராமம் எம்.ஜி.ஆர் நகரில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளதால், சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.