கடலூர் அடுத்த கோண்டூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்ந்துபோய் காணப்படுகிறது. கால்வாயே தெரியாத அளவிற்கு செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.