தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக புதிய வீட்டு வசதி வாரியம் கடுகுபுரம், மேல தெரு ,காளியம்மன் கோவில் தெரு, காமராஜர் சாலை, ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாக திரிகிறது . இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,பொன்னவராயன் கோட்டை.