தேங்கும் சாக்கடை நீர்

Update: 2026-08-23 12:08 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக வடிகால் வசதியின்றி சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் உற்பத்தியாகின்றன. இதனால் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்