ஈரோடு எல்லப்பாளையம் ரோடு சோழாநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் செல்லும் சாக்கடை கால்வாயில் கடந்த ஒரு மாதமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?