வடலூர் பகுதியில் சென்னை- கும்பகோணம் செல்லும் பிரதான சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.