திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆலங்குளம் செல்லும் இணைப்பு சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.