வடக்கு தாமரைக்குளம் பெருமாள்புரம் கிராமத்தில் 300 குடும்பங்களுக்குமேல் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தெருக்களில் முறையாக கழிவுநீர் ஓடை அமைத்து பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் ஓடையில் இருந்து வெளியேறி சாலையில் பாய்வதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை சீரமைத்து கழிவுநீர் சாலையில் பாய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கரண்,பெருமாள்புரம்.