வாறுகால் தூர்வாரப்படுமா?

Update: 2026-11-15 12:26 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு எஸ்.ராமச்சந்திராபுரம் இந்திரா காலனி 9-வது வார்டு பகுதியில் உள்ள வாறுகால் முறையான பராமரிப்பின்றி கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மேற்கண்ட பகுதியில் உள்ள வாறுகாலை சுத்தம் செய்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்