சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2026-11-15 10:00 GMT

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுக்கூடலூர் பகுதியில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. அத்துடன் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பாதசாரிகள் மீது கழிவுநீரை வாரி இறைத்து செல்கின்றன. இதனால் அவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்