சாலையில் பாயும் கழிவுநீர்

Update: 2026-11-15 09:07 GMT

கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடுகன்பற்று பாலம் அருகில் கழிவுநீர் சாலையில் பாய்கிறது. மேலும், சாலையில் உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் கழிவுநீர் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகங்காதரன், தென்தாமரைகுளம்.

மேலும் செய்திகள்