தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-11-14 18:33 GMT
விருத்தாசலம் அடுத்த ஊ.மங்கலம் அருகே கூனங்குறிச்சி புதுநகர் கிராமத்தில் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள், வாகனஓட்டிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, காலரா போன்றவை பரவும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்