மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பி.முத்துலிங்கபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இங்குள்ள வீடுகளின் முன்பு கழிவுநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர முன்வருவார்களா?