ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வெளி நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் தேங்கியுள்ள மழைநீரால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஆஸ்பத்தி முன்பு மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.